Hello Guest! Welcome to our Website.
Something you might want to know about us.
Don't be hesitated to contact us if you have something to say.

உத்தமம் ,...

| 0 comments | 30.10.08
|


நினைவுகளை சுமப்பதை,
- விட
நிஜங்களை கடப்பதே,
உத்தமம் ,...

முத்தங்கள்,...

| 1 comments |
|


எதிர்பார்த்தாலும் கிடைக்காது,
எதிர்ப்பையும் ஏற்பது !

விலைக்கு கிடைக்காது,
விற்கவும் முடியாது !

கேட்டாலும் கிடைக்காது,
கேட்க்கவும் முடியாது !

மறக்கவும் முடியாது,
மறைக்கவும் முடியாது !

எதிர்பாராமல் கிடைக்கும்
முத்தங்கள் !!!

முதலாய் முதன் முதலாய்,
கிடைக்கும் முத்தங்கள் !!!,..

கவிதையே,...

| 1 comments | 29.10.08
|


உனக்காக எழுதுகிறேன்,
உன்னை நினைத்து கவிதை !

உனக்காக எழுதுகிறேன்,
என்னை மறந்து கவிதை !

உனக்காக எழுதுகிறேன்,
என் உயிருள்ள கவிதை !

உனக்காக எழுதுகிறேன்,
என்னுள் பொய்யில்லா கவிதை !

உனக்காக எழுதுகிறேன்,
கதையில்லா கவிதை !

உனக்காக எழுதுகிறேன்,
வருத்தமில்லா கவிதை !

உனக்காக எழுதுகிறேன்,
என்னுயிர் கவிதையே !!!,...

சிந்தனை சிறகுகள்

| 0 comments |
|


மனிதன் சிந்திக்க
தொடங்கும் போது தான்,...
வெற்றிகளை சந்திக்க
தொடங்குகிறான்,...
சிந்தனை நம் வாழ்வின்
முன்னேற்றத்தின் திறவுகோல்,...
சிந்தனை மூலமே எது சரி ?
எது தவறு ? என கண்டு தெளிகிறான்,...
சிந்திக்க தெரிந்தவனே
சாதனைகளை சந்திக்க தெரிந்தவன்,...
இன்றில் இருந்தாவது
சிந்திக்க தொடங்குங்கள்,...



கனவினில்,...

| 0 comments | 16.9.08
|


எனக்காக நேசித்தேன்,
உனக்காக யாசித்தேன் !

கவிதையாக வாசித்தேன்,
கனவினில் நேற்று !

நீயோ ?!

கனவாக நேசித்தாய்,
கடுமையாக யாசித்தாய்,

கடனாக வாசிக்கிறாய்,
நிஜத்தில் இன்று !...


மெளனம்,...

| 0 comments | 1.8.08
|


மௌனமாய்
பேசி சென்றாய்,

கண்களினால்.





மௌனமாய்

புலம்புகிறேன்,

உன் கண்ணசைவால்.





மெளனம் கூட

உன்னால்,

மெளனம் ஆனது.





நானும் கூட தான்,...



நிலவே வெண்ணிலவே !

| 0 comments | 30.7.08
|


நிலவே
வெண்ணிலவே ,
நீ ஏன் ஓடி ஒளிந்தாய்?

மாதத்தில்
ஒருநாள் மட்டும்
எனக்கு ஏன் இருளை தந்தாய்?

ஒருநாள் என்பது
உனக்கு
அது ஒருநாள்,
எனக்கோ
அது ஒருயுகம்.

சிரிப்பு

| 0 comments | 31.5.08
|


தினம் தினம்
பூக்கும்
பூக்களை விட
என்றாவது வரும் போது
நீ சிரிக்கும்
உனது சிரிப்பு
அழகானது ,...

தனிமையில் நான்,...

| 0 comments | 23.4.08
|



தனிமையை நான் நேசிக்கிறேன்,
உன் முகம் ஒளிரும் என்றோ ?!,...

தென்றலை நான் உணர்கின்றேன் ,
உன் குரல் ஒலிக்கும் என்றோ ?!,...

காற்றை நான் சுவாசிக்கிறேன்,
உன் சுவாசம் கலந்திருக்கும் என்றோ ?!,...

இரவினில் நீண்டநேரம் விழித்திருக்கிறேன்,
நீயும் விழிதிருப்பாய் என்றோ ?!,...

காலையில் விழித்தெழ மறுக்கின்றேன்,
நீ கலைந்து விடுவாய் என்றோ ?!,...

உன்னையே !
நினைத்து என்னிதயம் மகிழ்கின்றது,
நீயும் நினைத்துக்கொண்டு இருப்பாய் என்றோ ?!!!,...

-மதி.பிரகாஷ்,...

தெரியுமா?,...

| 0 comments | 8.4.08
|



கவிதை,...
என்பது,
எழுத்தின் வடிவம் !
அல்லது,
காதலின் வடிவம் !

காதல்,...
என்பது,
ஆசையின் குமுறல் !
அல்லது,
அன்பின் குமுறல் !

அன்பு,...
என்பது,
நட்பின் வலிமை !
அல்லது,
நடிப்பின் வலிமை !

நட்பு,...
என்பது,
இன்பத்தின் கூடல் !
அல்லது,
இழப்பின் கூடல் !

-மதி.பிரகாஷ்,..

ஒன்று, இரண்டு, மூன்று, ...

| 1 comments | 2.4.08
|



ஓரெழுத்து கவிதை நீ !
ஈரெழுத்து கவிதை தோழி!
மூன்றெழுத்து கவிதை நட்பு!...

- மதி.பிரகாஷ்.,



கவிதையை நோக்கி,...

| 0 comments | 28.3.08
|



இரவின் வெளியீடு,
விடியலை நோக்கி !

இருளின் வெளியீடு,
வெளிச்சத்தை நோக்கி !

எண்ணத்தின் வெளியீடு,
வெற்றியை நோக்கி !

என் இதயத்தின் வெளியீடு,
கவிதையை நோக்கி !!!,...

-மதி.பிரகாஷ்,...

பிரிவும் சுகமானது,...

| 0 comments |
|



முன்னவன் பார்வையில் அவள்,
பின்னவன் காண்கையில் கானல் நீர் !

முன்னவன் கண்ட அவள்,
பின்னவன் காண்கையில் முன் அவன் !

அவளின் நா திறக்கையில் ,
அவனின் நா திறந்தது !

திறந்ததனால் எழுந்த,
மொழியினிலே மொழியும் கலந்தது !

சிறுமணிதுளி அளவு காலத்தில்,
பிரிவு தழுவியது அவர்களை !

அந்த பிரிவும் சுகமானதானது ,
அடுத்த சந்திப்பை எதிர்நோக்கி !?,...

-மதி.பிரகாஷ்,...

நேசம்,...

| 2 comments | 26.3.08
|



நிலவின் ஒளியில்
நீரின் குளிரில் !
மலரின் மனத்தில்
மாலையின் சுகத்தில் !

மயிலின் அழகில்
மௌன மொழியில் !
இடியின் இசையில்
இசையின் சுகத்தில் !

மண்ணின் வாசத்தில்
உயிரின் சுவாசத்தில் !
மலையின் உயரத்தில்
அன்பின் ஆழத்தில் !

அனைத்திலும் உணர்கின்றேன்
உனது நேசத்தை !!!

-மதி.பிரகாஷ்.,

மலரும்,...

| 1 comments |
|


காதலி உள்ளிருந்தால்
கண்ணீர் மலரும் !

கண்ணீர் உள்ளிருந்தால்
கவிதை மலரும் !

கவிதை உள்ளிருந்தால்
காதல் மலரும் !

காதல் உள்ளிருந்தால்
மௌனம் மலரும் !

மௌனம் உள்ளிருந்தால்
வார்த்தை மலரும் !

வார்த்தை உள்ளிருந்தால்
கனவு மலரும் !

கனவு உள்ளிருந்தால்
நினைவு மலரும் !,...

நினைவுடன் ,...

-மதி.பிரகாஷ்,...

மருமகள்,...

| 0 comments | 24.3.08
|



கையில் விளக்குடன்
ஒரு பெண்
வீட்டிற்குள் புகுந்தாள்

உள்ளே இருந்தவர்கள்
யாரென்றனர் ?!!
அவளை பார்த்து ,...

இன்னுமா புரியவில்லை !
நான் தான் உங்கள் வீட்டுக்கு
விளக்கேற்ற வந்தவள்,...

என்ன ?!!!,....

-மதி.பிரகாஷ்.,

நட்பு,...

| 1 comments |
|



உள்ளங்கையில்
உன்னை வைத்து,

உறவை தள்ளி வைத்து,

நினைத்து பார்த்தேன் !
உனக்கும்,
எனக்குமுள்ள நட்பை !

நட்புடன் ,...

-மதி.பிரகாஷ்.,

முதிர் கன்னிகள்

| 1 comments | 22.3.08
|




கண்களில் ஈரம்
காயும் முன்னே,

எங்களை ஏற்கும்
கரங்கள் வருமா ?!

கண்ணீருடன்
பூக்கள்,...




-ம.பிரகாஷ்.,


இளமையில் வருவது,...

| 0 comments |
|



இதழ்களால் வருவதில்லை,
இதயத்தால் வருவது !

இன்பத்தால் வருவதில்லை,
இன்பமாக வருவது !

துணிந்தால் வருவதில்லை,
துணிவாக வருவது !

கண்முன் வருவதில்லை,
கனவாக வருவது !

கனியாக வருவதில்லை,
கனிவாக வருவது !

சுவைத்தால் வருவதில்லை,
சுவையாக வருவது !

எழுத்தில் வருவதில்லை,
எழுத்தாய் வருவது தான் காதல் ,.....

-மதி.பிரகாஷ்,...



ஆசை,...

| 1 comments | 20.3.08
|


எனது துயரைப் போக்க,
நான் உன்னை ஏந்தினேன் !

உனது துயரை நீக்க,
நீ என்னை ஏற்றாய் !

எனது துயர் உனது,
உயிரின் பிரியலாக அமையும் !

என அறியாத நான்,
அறிந்தும் ஏற்ற நீ !

உன்னை போல் பிறவி எடுக்க,
ஆசை ! நானும் எழுதுகோலாக !!.,

-மதி.பிரகாஷ்.,

ஓவியமே,...

| 0 comments |
|


முதலில் வண்ணந்தான் கண்டேன்,
முதுகில் வளைவுகள் ஏன்கண்டேன் !

முகத்தில் வெக்கந்தான் கண்டேன்,
உதட்டில் சிரிப்பை ஏன்கண்டேன் !

உன்னில் உருவந்தான் கண்டேன்,
கண்ணில் கருவிழியை ஏன்கண்டேன் !

முதுகில் கூந்தலைதான் கண்டேன்,
கூந்தல் மாலையினுள் ஒழிய ஏன்கண்டேன் !

உன் அழகைதான் கண்டேன்,
ஓவியமே உன்னை உயிராக ஏன்கண்டேன் !

-மதி.பிரகாஷ்.,

சிதறல்கள்,....

| 1 comments | 18.3.08
|




எனது ஓவியத்தில் இடமளித்தேன்,
வண்ணங்களை சிதறடித்தாய் !

எனது கவிதையில் இடமளித்தேன்,
கற்பனையை சிதறடித்தாய் !

எனது விழிகளில் இடமளித்தேன்,
பார்வையை சிதறடித்தாய் !

எனது இதழ்களில் இடமளித்தேன்,
சிரிப்பை சிதறடித்தாய் !

எனது இதயத்தில் இடமளித்தேன்,
எண்ணங்களை சிதறடித்தாய் !

என்னில் இருந்து சிதறிய சிதறல்கள்,
யாவும் நீயே !!

- ம . பிரகாஷ்.,

காதல்,...

| 0 comments |
|


கண்களை கசக்கி கொண்டு,
வாசலில் நின்றாய் !

கனவுகளை சுமந்து கொண்டு,
கட்டிலில் விழிதாய் !

எதையோ பரிகொடுத்ததுபோல்,
உடம்பை கெடுத்தாய் !

இத்தனையும் எதனால் ?!
என்று யோசித்துப்பார்.

உனக்கே புரியும்,
காதல் உனக்குள் எழுந்த உண்மை !!!,....

- மதி. பிரகாஷ்,.....

Related Posts with Thumbnails
 

திருக்குறள்