Hello Guest! Welcome to our Website.
Something you might want to know about us.
Don't be hesitated to contact us if you have something to say.

உத்தமம் ,...

| 0 comments | 30.10.08
|


நினைவுகளை சுமப்பதை,
- விட
நிஜங்களை கடப்பதே,
உத்தமம் ,...

முத்தங்கள்,...

| 1 comments |
|


எதிர்பார்த்தாலும் கிடைக்காது,
எதிர்ப்பையும் ஏற்பது !

விலைக்கு கிடைக்காது,
விற்கவும் முடியாது !

கேட்டாலும் கிடைக்காது,
கேட்க்கவும் முடியாது !

மறக்கவும் முடியாது,
மறைக்கவும் முடியாது !

எதிர்பாராமல் கிடைக்கும்
முத்தங்கள் !!!

முதலாய் முதன் முதலாய்,
கிடைக்கும் முத்தங்கள் !!!,..

கவிதையே,...

| 1 comments | 29.10.08
|


உனக்காக எழுதுகிறேன்,
உன்னை நினைத்து கவிதை !

உனக்காக எழுதுகிறேன்,
என்னை மறந்து கவிதை !

உனக்காக எழுதுகிறேன்,
என் உயிருள்ள கவிதை !

உனக்காக எழுதுகிறேன்,
என்னுள் பொய்யில்லா கவிதை !

உனக்காக எழுதுகிறேன்,
கதையில்லா கவிதை !

உனக்காக எழுதுகிறேன்,
வருத்தமில்லா கவிதை !

உனக்காக எழுதுகிறேன்,
என்னுயிர் கவிதையே !!!,...

சிந்தனை சிறகுகள்

| 0 comments |
|


மனிதன் சிந்திக்க
தொடங்கும் போது தான்,...
வெற்றிகளை சந்திக்க
தொடங்குகிறான்,...
சிந்தனை நம் வாழ்வின்
முன்னேற்றத்தின் திறவுகோல்,...
சிந்தனை மூலமே எது சரி ?
எது தவறு ? என கண்டு தெளிகிறான்,...
சிந்திக்க தெரிந்தவனே
சாதனைகளை சந்திக்க தெரிந்தவன்,...
இன்றில் இருந்தாவது
சிந்திக்க தொடங்குங்கள்,...



கனவினில்,...

| 0 comments | 16.9.08
|


எனக்காக நேசித்தேன்,
உனக்காக யாசித்தேன் !

கவிதையாக வாசித்தேன்,
கனவினில் நேற்று !

நீயோ ?!

கனவாக நேசித்தாய்,
கடுமையாக யாசித்தாய்,

கடனாக வாசிக்கிறாய்,
நிஜத்தில் இன்று !...


மெளனம்,...

| 0 comments | 1.8.08
|


மௌனமாய்
பேசி சென்றாய்,

கண்களினால்.





மௌனமாய்

புலம்புகிறேன்,

உன் கண்ணசைவால்.





மெளனம் கூட

உன்னால்,

மெளனம் ஆனது.





நானும் கூட தான்,...



நிலவே வெண்ணிலவே !

| 0 comments | 30.7.08
|


நிலவே
வெண்ணிலவே ,
நீ ஏன் ஓடி ஒளிந்தாய்?

மாதத்தில்
ஒருநாள் மட்டும்
எனக்கு ஏன் இருளை தந்தாய்?

ஒருநாள் என்பது
உனக்கு
அது ஒருநாள்,
எனக்கோ
அது ஒருயுகம்.

சிரிப்பு

| 0 comments | 31.5.08
|


தினம் தினம்
பூக்கும்
பூக்களை விட
என்றாவது வரும் போது
நீ சிரிக்கும்
உனது சிரிப்பு
அழகானது ,...

தனிமையில் நான்,...

| 0 comments | 23.4.08
|



தனிமையை நான் நேசிக்கிறேன்,
உன் முகம் ஒளிரும் என்றோ ?!,...

தென்றலை நான் உணர்கின்றேன் ,
உன் குரல் ஒலிக்கும் என்றோ ?!,...

காற்றை நான் சுவாசிக்கிறேன்,
உன் சுவாசம் கலந்திருக்கும் என்றோ ?!,...

இரவினில் நீண்டநேரம் விழித்திருக்கிறேன்,
நீயும் விழிதிருப்பாய் என்றோ ?!,...

காலையில் விழித்தெழ மறுக்கின்றேன்,
நீ கலைந்து விடுவாய் என்றோ ?!,...

உன்னையே !
நினைத்து என்னிதயம் மகிழ்கின்றது,
நீயும் நினைத்துக்கொண்டு இருப்பாய் என்றோ ?!!!,...

-மதி.பிரகாஷ்,...

தெரியுமா?,...

| 0 comments | 8.4.08
|



கவிதை,...
என்பது,
எழுத்தின் வடிவம் !
அல்லது,
காதலின் வடிவம் !

காதல்,...
என்பது,
ஆசையின் குமுறல் !
அல்லது,
அன்பின் குமுறல் !

அன்பு,...
என்பது,
நட்பின் வலிமை !
அல்லது,
நடிப்பின் வலிமை !

நட்பு,...
என்பது,
இன்பத்தின் கூடல் !
அல்லது,
இழப்பின் கூடல் !

-மதி.பிரகாஷ்,..

Related Posts with Thumbnails
 

திருக்குறள்