Hello Guest! Welcome to our Website.
Something you might want to know about us.
Don't be hesitated to contact us if you have something to say.

மெளனம்,...

| 0 comments | 1.8.08
|


மௌனமாய்
பேசி சென்றாய்,

கண்களினால்.





மௌனமாய்

புலம்புகிறேன்,

உன் கண்ணசைவால்.





மெளனம் கூட

உன்னால்,

மெளனம் ஆனது.





நானும் கூட தான்,...



நிலவே வெண்ணிலவே !

| 0 comments | 30.7.08
|


நிலவே
வெண்ணிலவே ,
நீ ஏன் ஓடி ஒளிந்தாய்?

மாதத்தில்
ஒருநாள் மட்டும்
எனக்கு ஏன் இருளை தந்தாய்?

ஒருநாள் என்பது
உனக்கு
அது ஒருநாள்,
எனக்கோ
அது ஒருயுகம்.

சிரிப்பு

| 0 comments | 31.5.08
|


தினம் தினம்
பூக்கும்
பூக்களை விட
என்றாவது வரும் போது
நீ சிரிக்கும்
உனது சிரிப்பு
அழகானது ,...

தனிமையில் நான்,...

| 0 comments | 23.4.08
|



தனிமையை நான் நேசிக்கிறேன்,
உன் முகம் ஒளிரும் என்றோ ?!,...

தென்றலை நான் உணர்கின்றேன் ,
உன் குரல் ஒலிக்கும் என்றோ ?!,...

காற்றை நான் சுவாசிக்கிறேன்,
உன் சுவாசம் கலந்திருக்கும் என்றோ ?!,...

இரவினில் நீண்டநேரம் விழித்திருக்கிறேன்,
நீயும் விழிதிருப்பாய் என்றோ ?!,...

காலையில் விழித்தெழ மறுக்கின்றேன்,
நீ கலைந்து விடுவாய் என்றோ ?!,...

உன்னையே !
நினைத்து என்னிதயம் மகிழ்கின்றது,
நீயும் நினைத்துக்கொண்டு இருப்பாய் என்றோ ?!!!,...

-மதி.பிரகாஷ்,...

தெரியுமா?,...

| 0 comments | 8.4.08
|



கவிதை,...
என்பது,
எழுத்தின் வடிவம் !
அல்லது,
காதலின் வடிவம் !

காதல்,...
என்பது,
ஆசையின் குமுறல் !
அல்லது,
அன்பின் குமுறல் !

அன்பு,...
என்பது,
நட்பின் வலிமை !
அல்லது,
நடிப்பின் வலிமை !

நட்பு,...
என்பது,
இன்பத்தின் கூடல் !
அல்லது,
இழப்பின் கூடல் !

-மதி.பிரகாஷ்,..

ஒன்று, இரண்டு, மூன்று, ...

| 1 comments | 2.4.08
|



ஓரெழுத்து கவிதை நீ !
ஈரெழுத்து கவிதை தோழி!
மூன்றெழுத்து கவிதை நட்பு!...

- மதி.பிரகாஷ்.,



கவிதையை நோக்கி,...

| 0 comments | 28.3.08
|



இரவின் வெளியீடு,
விடியலை நோக்கி !

இருளின் வெளியீடு,
வெளிச்சத்தை நோக்கி !

எண்ணத்தின் வெளியீடு,
வெற்றியை நோக்கி !

என் இதயத்தின் வெளியீடு,
கவிதையை நோக்கி !!!,...

-மதி.பிரகாஷ்,...

பிரிவும் சுகமானது,...

| 0 comments |
|



முன்னவன் பார்வையில் அவள்,
பின்னவன் காண்கையில் கானல் நீர் !

முன்னவன் கண்ட அவள்,
பின்னவன் காண்கையில் முன் அவன் !

அவளின் நா திறக்கையில் ,
அவனின் நா திறந்தது !

திறந்ததனால் எழுந்த,
மொழியினிலே மொழியும் கலந்தது !

சிறுமணிதுளி அளவு காலத்தில்,
பிரிவு தழுவியது அவர்களை !

அந்த பிரிவும் சுகமானதானது ,
அடுத்த சந்திப்பை எதிர்நோக்கி !?,...

-மதி.பிரகாஷ்,...

நேசம்,...

| 2 comments | 26.3.08
|



நிலவின் ஒளியில்
நீரின் குளிரில் !
மலரின் மனத்தில்
மாலையின் சுகத்தில் !

மயிலின் அழகில்
மௌன மொழியில் !
இடியின் இசையில்
இசையின் சுகத்தில் !

மண்ணின் வாசத்தில்
உயிரின் சுவாசத்தில் !
மலையின் உயரத்தில்
அன்பின் ஆழத்தில் !

அனைத்திலும் உணர்கின்றேன்
உனது நேசத்தை !!!

-மதி.பிரகாஷ்.,

மலரும்,...

| 1 comments |
|


காதலி உள்ளிருந்தால்
கண்ணீர் மலரும் !

கண்ணீர் உள்ளிருந்தால்
கவிதை மலரும் !

கவிதை உள்ளிருந்தால்
காதல் மலரும் !

காதல் உள்ளிருந்தால்
மௌனம் மலரும் !

மௌனம் உள்ளிருந்தால்
வார்த்தை மலரும் !

வார்த்தை உள்ளிருந்தால்
கனவு மலரும் !

கனவு உள்ளிருந்தால்
நினைவு மலரும் !,...

நினைவுடன் ,...

-மதி.பிரகாஷ்,...

Related Posts with Thumbnails
 

திருக்குறள்